Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 947)
Paththati 30 - சித்ர பத்ததி
ஸாரஸ ஸௌக்ய ஸமேதா க்யாதா பதபா புவி ஸ்வாஜ்ஞா ஸாஹஸ கார்யவந ஆசா தீரா வஸுதா நவ ந்யாஸா
அர்ச்சனை செய்யப்பட்ட தாமரை மலர் மூலம் ஸௌக்யத்தை அடைந்தவளும், நன்மையே அளிக்கவல்ல ஆணைகளை இடுபவளும், இராமனை எப்படியாவது மீண்டும் அழைக்கவேண்டும் என்ற ஸாஹஸம் செய்த பரதனைக் காப்பதில் விருப்பம் கொண்டவளும், அடியார்களுக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் காப்பாற்றியே தீருவது என்ற உறுதி உள்ளவளும், அடியார்கள் வேண்டிய ஸம்பத்தை அளிப்பவளும், புதிது புதிதான இரத்தினக்கற்கள் உடையவளும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகை - இந்த உலகில் உள்ள அடியார்களால் மிகவும் சுலபமாக அடையத்தக்கவள் என்னும் பெருமை கொண்டவள் ஆவாள்.
இந்த ச்லோகத்தை அப்படியே தலைகீழாகப் படித்தால் அடுத்த ச்லோகம் தோன்றுவதைக் காண்க.