Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 946)
Paththati 30 - சித்ர பத்ததி
க்ருபா அநக த்ராத ஸுபூ: அதுஷ்டா மேத்யா ருசா பாரிஷதா ஆம பூபா பாதாவநி ஸ்த்யாந ஸுகை: ந த்ருப்தா காந்த்யா ஸமேதா அதிக்ருதா அநிரோதா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது கருணை காரணமாக, எந்தவிதமான துயரமும் இந்த பூமிக்கு உண்டாகாதபடி இந்தப் பூமியை ஆண்டாய்; தோஷங்கள் ஏதும் இல்லாமல் உள்ளாய்; உனது ஒளியால் தூய்மையாக உள்ளாய்; ஸாதுக்களின் கோஷ்டியில் எப்போதும் உள்ளாய் (அல்லது ஸபையோர்களாக ஐச்வர்யம் நிறைந்த அரசர்களை உடையவள்); ஸ்ரீரங்கநாதனின் திருவடி அநுபவம் மூலம் எழுகின்ற இன்பத்தினால் மனநிறைவு அடையாமல், மேலும் அவன் திருவடிகளை சுவைக்க விருப்புகிறாய்; அவ்விதம் அவனது திருவடிகளை அனுபவிப்பதால் முழு அதிகாரம் பெற்று, தடை இல்லாமல் உள்ளாய். இப்படிப்பட்ட நீ வரவேண்டும்.