Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 945)

Paththati 30 - சித்ர பத்ததி

தாம நிராக்ருத தாமஸ லோகா தாத்ருமுகை: விநிதா நிஜதாஸை: பாபம் அசேஷம் அபாகுருஷே மே பாது விபூஷித ராகவ பாதா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது தேஜஸ் மூலமாக அசுரர்களின் ஸ்வபாவம் நிறைந்ததான தமோ குணத்தை நீங்கப் பெற்றவர்களை உடையவளாக உள்ளாய். உனது அடிமைகளாக உள்ள நான்முகன் போன்றவர்களால் எப்போதும் வணங்கப்பட்டவளாக உள்ளாய். உன்னால் அலங்கரிக்கப்பட்ட இராமனின் திருவடிகளுடன் எப்போதும் உள்ளாய். என்னுடைய அனைத்துப் பாவங்களையும் போக்கி வருகிறாய்.