Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 944)

Paththati 30 - சித்ர பத்ததி

தீந கோபீ ஜநி க்லிஷ்ட பீ நுத் ஸதா ராமபாதாவநி ஸ்வாநுபவ ஸ்திதா ஏதிமே அவச்யம் உத்தாரபாவச்ரிதா தேஜஸா தேந குஷ்டிம் கதா பாலிகா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கண்ணனைத் தவிர வேறு எதனையும் நினைக்காமல் இருந்த கோபிகைகளின் மறு பிறவியையும், கம்ஸன் மூலம் ஏற்பட்ட பயம் போன்ற துன்பங்களையும், இந்திரன் போன்றவர்களின் மூலம் ஏற்பட்ட அச்சத்தையும் நீ போக்கினாய்; எந்த உனது தேஜஸ் மூலம் இந்த உலகை நியமித்தபடியும், ரக்ஷித்தபடியும் உள்ளாயோ, அந்த மேன்மை மூலம் நீ என்னைக் கண்டிப்பாகக் காப்பாற்றி, உனது கைங்கர்யத்தில் நிலை நிறுத்தவேண்டும்.