Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 943)
Paththati 30 - சித்ர பத்ததி
கநக பீட நிவிஷ்ட தநு: ததா ஸுமதி தாயி நிஜ அநுபாவ ஸ்ம்ருதா விதிசிவ ப்ரமுகை: அபிவந்திதா விஜயதே ரகு புங்கவ பாதுகா
கோஸல நாட்டை அரசாண்ட காலத்தில் தங்கமயமான ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தவள்; நல்ல புத்தியை அளிக்கவல்ல தனது தரிசனம் மற்றும் நினைவைக் கொண்டவள் (தன்னைத் த்யானிப்பவர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்து அவர்களுக்கு நல்ல புத்தி அளிப்பவள்); நான்முகன், சிவன் போன்றவர்களால் எப்போதும் வணங்கப்படுபவள் – இப்படிப்பட்டவளான ரகுகுலத்தின் நாயகன் இராமனின் பாதுகை எப்போதும் வெற்றியுடன் உள்ளாள்.