Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 942)
Paththati 30 - சித்ர பத்ததி
ஸ்ரீ ஸம்வேதந கர்ம க்ருத் வஸு தவ ஸ்யாம் ருத்த தைர்ய ஸ்புட: ஸ்ரீபாதாவநி விஸ்த்ருதா அஸி ஸுகிநீ த்வம் கேய யாதாயநா வேதாந்த அநுபவ அதிபாதி ஸுதநு: ஸாந்த்ர இட்யபாவ ப்ரதே அங்கஸ்தா அச்யுத திவ்ய தாஸ்ய ஸுமதி: ப்ராணஸ்த ஸீதா தன
அதிகமாக வணங்கப்படும் தகுதியைக் கொண்டதால் மேன்மையும், இராமனின் உயிர்நிலையாக உள்ள சீதையின் செல்வமாகவும் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே, வேதங்களின் எல்லையாக உள்ள உபநிஷத்துகளின் மூலம் மட்டுமே அறியவல்லதான ஸ்ரீரங்கநாதனின் அனுபவத்தைக் காட்டிலும், மேலான இன்பம் அளிக்கவல்ல திவ்யமான திருமேனி கொண்டவள்; அடியார்களை எப்போதும் நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் கைங்கர்யங்களில் தனது புத்தியை எப்போதும் வைத்துள்ளவள்; இதனால் அவனுடைய சாமரங்கள் முதலான பொருட்களில் முதன்மையாக உள்ளவள்; அழகான ஸஞ்சாரங்கள் கொண்டவள்; எல்லையற்ற ஆனந்தம் கொண்டவள்; ஸ்ரீரங்கநாதனின் பல திரு அவதாரங்களுக்கு ஏற்றபடி பல ரூபங்களைக் கொண்டவள். இப்படியாகப் பல மேன்மைகள் பொருந்தியவளாக நீ உள்ளாய். ஸாதுக்களின் செல்வம் என்று போற்றப்படும் வேதங்கள் கூறிய உயர்ந்த கர்மங்களை இயற்றுபவர்களின் பெரும் செல்வமாக நீ உள்ளாய். இதனால் மிகவும் தெளிந்து நம்பிக்கை பெற்ற நான், உனக்கே அடிமையாக வேண்டும்.