Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 941)
Paththati 30 - சித்ர பத்ததி
ரம்யே வேச்மநி பாப ராக்ஷஸ பிதா ஸ்வாஸக்ததீ நாயிகா நந்தும் கர்ம ஜ துர்மத அலஸ தீயாம் ஸா ஹந்த நாதீக்ருதா ஸத்வாட ப்ரமிகாஸு தாபஸ தபோ விஸ்ரம்ப பூ யந்த்ரிகா காசித் ஸ்வைரகமேந கேளிஸமயே காமவ்ரதா பாதுகா
பாவங்கள் நிறைந்த அசுரர்களை அழிப்பதில் மிகுந்த ஆவல் கொண்ட புத்தியுள்ள இராமனை அழைத்துச் செல்கிறாள்; தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் செய்வதால், விளையாடும் காலங்களில் தன்னையும் ஸ்ரீரங்கநாதனையும் அண்டி நிற்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை ஒரு விரதமாகவே கொண்டுள்ளாள். ஸாதுக்களான முனிவர்கள் உள்ள இடங்களில் ஸஞ்சாரம் செய்யும்போது, அந்த முனிவர்களுக்கு தங்கள் தவங்கள் மீது உள்ள நம்பிக்கையை வளர்த்து, தங்கள் தவம் வீணாகாது என்ற உறுதியை அளிப்பதான அடிவைப்பைக் (தனது ரேகையை அந்த பூமியில் பதித்து) கொண்டதாக உள்ளாள். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை – பாவங்கள் காரணமாக உண்டான கர்வம் முதலியவற்றால் ஏற்பட்ட சோம்பல் காரணமாகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் உள்ளவர்கள் வணங்குவதற்காக, மிகவும் அழகான ஸ்ரீரங்கவிமானத்தில் எஜமானியாக அமர்ந்துள்ளாளே! என்ன வியப்பு!