Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 940)

Paththati 30 - சித்ர பத்ததி

ஸாகேத த்ராண வேளா ஜநித தத நிஜ ப்ராங்கண ஸ்ரீப்ரபாஸா ஸாபா ப்ரச்ரீ: அடவ்யாம் இயம அமம யமி வ்யாபத் உச்சேதி லாஸா ஸாலாதிச்சேத திக்ம ஆஹவ ருருரு வஹ ஹ்ரீ கரஸ்ய ஆம ராஸ அஸா ஸா ராமஸ்ய அங்க்ரிம் அப்யாஜதி ந ந நதி ஜ ஸ்தூலம் உத்ராதகே ஸா

அயோத்தியைக் காப்பாற்றி அரசாண்ட காலத்தில் அமைக்கப்பட்ட ராஜசபையின் ஆஸ்தான மண்டபத்தில் தனது ஞானம், ஐச்வர்யம் முதலானவற்றுடன் கூடிய ஒளியை உடையவள்; இதனால் மேலும் அழகும் மேன்மையும் அடைந்தவள்; மேன்மேலும் வளர்ந்த ராஜ்யசெல்வம் கொண்டதாக விளங்கியவள்; ஸம்ஸாரம் என்ற காட்டில் மமகாரம், பொருள் ஆசை, பற்றுதல்கள் போன்றவை இல்லாமல் வாழ்கின்ற உயர்ந்தவர்களுக்கு, சத்ருக்கள் மூலம் உண்டாகவல்ல ஆபத்துக்களை அடியுடன் வெட்டிச் சாய்ப்பதைத் தனது விளையாட்டாகவே கொண்டவள்; அதிக ஞானம் பெறாதவர்களாக இருந்தாலும் ஸ்ரீரங்கநாதனையும், பாதுகையையும் போற்றி நிற்பவர்களின் தவறான சொல் அமைப்புக்களை நீக்கி, அவர்களுக்கு ஞானமும் உயர்ந்த சொற்களையும் கொடுத்தபடி உள்ளவள் - இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை மேலும் செய்வது என்ன? ஸாரம் என்ற பலம் போன்றவற்றை முறியடிப்பதில் மிகவும் உக்ரமான யுத்தம் நடக்கும்போது, மானைக் கையில் ஏந்திய சிவனுக்கு தனது “ஹும்” என்ற ஓசையால் மட்டுமே பயந்து வெட்கம் ஏற்படும்படிச் செய்த இராமனுடைய திருவடிகளை வழி நடத்துகிறாள். இந்தத் திருவடிகள், ரக்ஷிக்கத் தகுந்தவர்கள் செய்கின்ற வணக்கம் காரணமாக மிகவும் மகிழ்வுடன் உள்ளன அல்லவோ?