Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 939)
Paththati 30 - சித்ர பத்ததி
பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா பாதபா படித்தல் – இந்த ச்லோகத்தைக் கீழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்: பாதப அபாதப ஆபாத பாப அத் அபா பாதபா பாத பா அ பாதபா அபாதபா பாத பாபாத் அ பாபாத் அ பாபாத் அபாபாத் அபாபா த பாபா ஆத பா பாத பா
கால்கள் என்னும் வேர் மூலம் நீரைப் பருகும் தாவரங்கள், அவ்விதம் கால்களால் பருகாமல் உள்ள மற்ற உயிரினங்கள் போன்றவற்றைச் சூழ்ந்துள்ள பாவங்களை நீக்கவல்ல அபிஷேக நீரை உடையவள்; ஸ்ரீரங்கநாதனின் உடைமையானவற்றில் நான்கில் ஒரு பங்கான இந்த லீலாவிபூதியைக் காப்பாற்றுபவள்; மேலே உள்ள பங்கு தவிர மீதம் உள்ள முக்கால் பங்கான நித்யவிபூதியைக் காப்பாற்றுபவள்; ரக்ஷிக்கப்பட வேண்டிய தாய் தந்தையர்களைக் காப்பாற்றுபவர்கள், அவ்விதம் காப்பாற்றாதவர்கள் விஷயத்தில் நன்மையை அளிப்பதும், நல்லதை நீக்குவதுமாக உள்ளவள்; ஸ்ரீரங்கநாதனின் திருக்கல்யாண குணங்களை எப்போதும் பருகும் ஸாதுக்களை, அவர்களின் புலன் வசப்படுத்தும் குணங்கள் போன்றவையே தூய்மைப்படுத்துகின்றன, அந்தக் குணங்களை வளரச்செய்கிறாள்; ஸ்ரீரங்கநாதனின் அடியார்களுடைய விரோதிகளை உலர்ந்து போகும்படிச் செய்கின்ற கிரணங்களை கொண்டுள்ளாள்; உயர்ந்த பதவிகளில் உள்ள இந்த்ரன் போன்றவர்களைக் காப்பாற்றும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளையும் காப்பாற்றுபவளாக பாதுகை உள்ளாள்.