Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 938)
Paththati 30 - சித்ர பத்ததி
தத்த கேளிம் ஜகத் கல்பநா நாடிகா ரங்கிணா ரங்கிணா ரங்கிணா ரங்கிணா தாத்ருசே காதி புத்ர அத்த்வரே த்வாம் விநா அபாத் உ கா பாதுகா பாது காபாதுகா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்த உலகத்தை ஸ்ருஷ்டி செய்தல் என்னும் நாடகத்தை நடத்துபவனாகவும், இதற்குத் தனக்கு வேறு யாரும் கற்றுக் கொடுக்கும் நாடகக்காரன் இல்லாதபடி தானே கைதேர்ந்த நாடகக்காரனாகவும், ஸ்ரீரங்கநாதன் உள்ளான். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனால் உனக்கு உல்லாஸமான ஸஞ்சாரம் அளிக்கப்பட்டது. உன்னைத் தவிர எந்தப் பாதுகை - காதி என்னும் அரசனின் புத்ரனாகிய விச்வாமித்ரரின் யாகத்தைக் காப்பாற்றி, அவருக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் இன்பம் அளித்துக் காப்பாற்றியது?