Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 937)

Paththati 30 - சித்ர பத்ததி

ரகுபதி சரணாவநீ ததா விரசித ஸஞ்சரணா வநீபதே க்ருத பரிசரணா வநீபகை: நிகமமுகைச்ச ரணாவநீ கதா

விச்வாமித்திரரின் யாகம் காக்கும் பொருட்டு கானக மார்க்கத்தில் சென்றவளும், மாரீசன் முதலான அசுரர்களை அழிப்பதற்காகப் போர்க்களம் சென்றவளும் ஆகிய ரகுகுல நாயகனான இராமனின் பாதுகை - விரோதிகளை அழித்துக் காப்பாற்ற வேண்டும் என்று வந்த விச்வாமித்திரர் போன்ற யாசகர்களாலும், வேதங்களில் சிறந்த மஹரிஷிகளாலும் செய்யப்படும் கைங்கர்யத்தைக் கொண்டதாக உள்ளாள்.

இதில் பாத சதுஷ்டய பாகவ்ருத்தி யமகம் உள்ளது. முதல் பாதம் மற்றும் மூன்றாம் பாதங்கள் 11 அக்ஷரங்களும், இரண்டு மற்றும் நான்காம் பாதங்கள் 12 அக்ஷரங்களும் கொண்டதாக உள்ளது.