Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 936)
Paththati 30 - சித்ர பத்ததி
யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா யா படித்தல் – இந்த ச்லோகத்தைக் கீழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்: யாயா யா ஆய ஆயாய அயாய அயாய அயாய அயாய அயாய யாயாய ஆயாயாய ஆயாயா யா யா யா யா யா யா யா யா
எவள் ஸ்ரீரங்கநாதனைச் சேர்ந்தவர்களின் லாபத்தின் பொருட்டு பாடுபடுகிறாளோ, எவள் அவனை அடைந்தவர்களின் சுபத்தின் பொருட்டு உள்ளாளோ, எவள் ஞானத்திற்காக உள்ளாளோ (ஞானத்தை அளிக்கிறாளோ), எவள் நல்ல விஷயங்கள் மீது விருப்பங்கள் அதிகரிக்கத் தூண்டும்படியாக உள்ளாளோ, எவள் அடியார்களின் விரோதிகளை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதனை அடைந்துள்ளாளோ, எவள் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் பொருட்டு அவனை அடந்துள்ளாளோ, எவள் ஸ்ரீரங்கநாதனை நம்மிடம் அழைத்து வருவதற்காக உள்ளாளோ, எவள் முக்தர்கள் எங்கும் ஸஞ்சாரம் செய்யும்படி செய்கிறாளோ - நல்ல கதியை அடைய உதவும் இப்படிப்பட்ட பாதுகையானவள், ஸ்ரீரங்கநாதனுக்கு எப்போதும் அடிமை செய்தபடி உள்ளாள்.
இந்த ச்லோகத்தில் பலவிதமான அமைப்புகள் உள்ளன. இவையாவன - ஏகஸ்வரிசித்ரம் (ஒரே ஸ்வரம்), ஏகவர்ணசித்ரம் (ஒரே எழுத்து), த்விஸ்தாநகம் ஸ்தாநீசித்ரம், கோமுசித்ரிகா, ஸர்வதோபத்ரம், கங்கணபந்தம், முரஜபந்தம், பத்மபந்தம், ச்லோகாநுலோம ப்ரதிலோம கதிசித்ரம், அர்த்தயமகம், பாதசதுராவ்ருத்தி யமகம், பாதார்த்த அஷ்டாவ்ருத்தி யமகம், ஏகாக்ஷர சித்ரசதா வ்ருத்தியகம் - ஆகும்.