Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 935)

Paththati 30 - சித்ர பத்ததி

ததாதத்தாதிதத்தேதா தாததீதேதாதிதுத் தத்தத்தத்தா ததிததா ததேதாதேத தாதுதா படித்தல் - இந்த ச்லோகத்தைக் கிழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்: தத அதத்தா அதி தத்தா இதா தாததி இத ஈதிதா அதிதுத் தத்தத் தத்தா ததி ததா ததா இ தாத இத தாதுதா

இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி இருப்பவள்; ”தத்” என்று போற்றப்படும் ப்ரஹ்மத்தின் தன்மையால் அடையப்படுபவள்; ஸம்ஸாரிகள் அடைகின்ற பலவிதமான துயரங்களை அடியுடன் நீக்குபவள்; உலகில் உள்ள அந்தந்த வஸ்துக்களின் தன்மைகளையும், அந்தந்த வஸ்துக்களையும் தனக்கு வசப்படுத்தியவள்; வீணை முதலான வாத்யங்கள் கொண்ட மன்மதனின் தந்தையான எம்பெருமானால் அடையப்பட்டது - இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை நமக்குத் தந்தையாக உள்ளது.