Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 934)
Paththati 30 - சித்ர பத்ததி
கோப உத்தீபக பாபே அபி க்ருபா பாக உபபாதிகா பூத பாதோதக அபாத உத்தீபிகா கா அபி பாதுகா
ஸ்ரீரங்கநாதனின் கோபத்தைக் தூண்டிவிடும் அளவிற்குப் பாவம் செய்கிறவன் விஷயத்திலும் ஸ்ரீரங்கநாதனின் கருணை வெளிப்படும்படியாகச் செய்பவள், தூய்மையை அளிக்கின்ற கங்கையைத் திருவடிகளில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு ஒளியை அளிப்பவள் – இப்படிப்பட்ட பாதுகையானவள், இப்படிப்பட்டவள் என்று தெளிவாகக் கூற இயலாத மேன்மை கொண்டவளாவாள்.