Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 933)

Paththati 30 - சித்ர பத்ததி

பாபாதபாபாதபாபா அபாதபாதத பாதபா தபாதபாபாதபாத பாதபா ததபாதபா

இந்த ச்லோகத்தைப் பின்வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்: பாபாத் அபாபாத் அபாபா அ பாத பாத த பாத பா த பாத பாப அத பாத பாதபா தத பாத் அபா அடியார்களின் பாவங்களை நீக்குபவளாகவும்; ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு வேண்டிய ஒளியை அளிக்கின்ற ஒளியைத் தன்னிடம் கொண்ட வளாகவும்; தன்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் ஸமர்ப்பிக்கின்றவர்கள் விஷயத்தில் காப்பாற்றும் அபிஷேக நீரை உடையவளாகவும், எப்போதும் காப்பாற்றுதலைச் செய்பளாகவும், பாவங்களை நீக்குவதற்காக இருக்கின்ற திருவடிகளைக் காப்பாற்றுபவளும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் என்னைப் பாவங்களில் இருந்து காப்பாற்றினாள்.

இந்த ச்லோகத்தில் த, ப என்ற இரண்டு மெய் எழுத்துக்களும்; அ, ஆ என்ற இரண்டு உயிர் எழுத்துக்களும் மட்டுமே உள்ளன. இதில் கடந்த ச்லோகம் போன்றே ஸர்வதோபத்ரம் உள்ளது.