Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 932)

Paththati 30 - சித்ர பத்ததி

ஜய ஆம பா அபாமயா அஜாய மஹே துதுஹே மயா மஹேச க ஆகாச ஹேம பாதுகா அமமக அத் உபா

இந்த்ரியத்தை வெல்வது போன்ற வெற்றி இல்லாதவர்களைக் காப்பாற்றுபவளாகவும், அமயம் எனப்படும் உடல் மற்றும் சரீரம் கலந்த வ்யாதி நீங்கும்படிச் செய்பவளும், மமகாரம் (எனது என்ற எண்ணம்) இல்லாத முனிவர்களிடம் எப்போதும் செல்பவளும், சிவனைக் காப்பாற்றுபவளும், உலகின் ஈச்வரர்களாக உள்ள இந்திரன் போன்றவர்களின் தலையில் அமர்பவளும் ஆகிய தங்கமயமான பாதுகைகள் – ஸ்ரீரங்கநாதனின் உத்ஸவ காலங்களில் என்னால், எனது விருப்பங்களைத் அளிக்கும்படியாகக் (காமதேனு பசு போன்று) கறக்கப்பட்டது.