Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 931)

Paththati 30 - சித்ர பத்ததி

லோகதாரா காமசாரா கவிராஜ துராவசா தாரா கதே பாத ரா ஆம ராஜதே ராமபாதுகா

தன்னை அண்டி நிற்பவர்களை எப்போதும் காப்பாற்றுபவளாகவும், தனது விருப்பப்படி எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி இருப்பவளும் (அல்லது, காமசாரா = ஆகாம சாரா என்று பிரித்து, அனைவரும் விரும்பக்கூடிய ஸஞ்சாரம் உடையவள் எனலாம்), வால்மீகி போன்ற உயர்ந்த கவிகளால் கூட தனது பெருமையை முழுவதும் உணர இயலாமல் உள்ளவளும், ஸஞ்சாரத்தில் தேர்ச்சி பெற்றவளும், மிகுந்த ஒளியுடன் கூடியவளும் - என்று பல தன்மைகளுடன் ஸ்ரீராமபாதுகை உள்ளது.