Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 930)

Paththati 30 - சித்ர பத்ததி

ஸ்திதா ஸமய ராஜத்பா கதரா மாதகே கவி துரம்ஹஸாம் ஸந்நதாதா ஸாத்யா அதாப கரா ஆஸரா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் கூறும் தர்ம மார்க்கத்தில் நிலையாக நிற்பவர்களைக் காப்பாற்றுபவளும், தங்கமயமாக அடியார்களுக்குச் கைங்கர்ய செல்வத்தை அளிப்பவளும், வணங்குபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவல்ல ஒளி மண்டலத்தில் உள்ளவளாகவும் (அல்லது தனது ஒளி மூலம் அவர்கள் துன்பத்தை நீக்கி மகிழ்வை அளிப்பவள்), மிகுந்த பாவம் செய்தவர்களின் பலனாக உள்ள கெட்ட காலங்களை விலக்குபவளாகவும், தாபம் இல்லாத தன்மையை அளிப்பவளாகவும், எங்கும் ஸஞ்சாரம் செய்து காப்பாற்றுபவளாகவும் உள்ள நீ, என்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் சேர்க்க வேண்டும்.