Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 929)
Paththati 30 - சித்ர பத்ததி
ஸ்திராகஸாம் ஸதா ஆராத்யா விஹத ஆகதத அமதா ஸத்பாதுகே ஸராஸா மா ரங்கராஜபதம் நய
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் வலிமையான பாவங்கள் செய்த ஸம்ஸாரிகளால் எப்போதும் ஆராதிக்கத்தக்கவள்; போக்கப்பட்ட துன்பங்கள், விருப்பம் அல்லாதவற்றை அனுபவிக்காத நிலை ஆகியவற்றைக் கொண்டவள் (உன்னை அடைந்தவர்களுக்கு இவற்றை அளிப்பவள்); இனிமையான நாதம் கொண்டவள் – இப்படிப்பட்ட பாதுகையான நீ, என்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிடம் அழைத்துச் செல்வாயாக.