Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 928)

Paththati 30 - சித்ர பத்ததி

பாபாகூபார பாளீபா த்ரிபாதீ பாத பாதபா க்ருபாரூபா ஜபாலாபா ஸ்வாபா மா அபாத் ந்ருபாதிபா

பாவங்கள் என்பவை வரிசையான ஸமுத்திரங்களாக நின்றாலும் அவற்றைப் பருக வல்லவள்; தயை வடிவமாக உள்ளவள்; அஷ்டாக்ஷரம் போன்ற மந்த்ரங்களின் ஜபம் போல் தூய்மை ஏற்படுத்தவல்லவள்; எளிதாக அடையக்கூடியவள்; அரசர்களுக்கு சக்ரவர்த்தினியாக நிற்பவள் – நித்யவிபூதியில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையானவள் என்னை அவன் பக்கம் சேர்த்துக் காப்பாற்றினாள்.