Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 925)
Paththati 30 - சித்ர பத்ததி
ஸுரகார்யகரீ தேவீ ரங்கதுர்யஸ்ய பாதுகா காமதா கலிதாதேசா சரந்தீ ஸாதுவர்த்மஸு
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் தேவர்களின் செயல்களைச் செய்து தருகிறாள். தேவர்களின் தன்மைகளைக் கொண்டவளாக உள்ளாள். வேண்டியவற்றை அளிக்கிறாள். இந்த உலகிற்கு எது நன்மை அளிக்குமோ, அவற்றைச் செய்யும்படி ஆணை இடுகிறாள். நல்ல வழிகளில் ஸஞ்சாரம் செய்கிறாள்.