Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 924)

Paththati 30 - சித்ர பத்ததி

காவ்யாய ஆஸ்தித மாவர்க்க வ்யாஜயாதக மார்க்ககா காமதா ஜகத: ஸ்தித்யை ரங்கபுங்கவ பாதுகா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் தங்கள் ஸஞ்சாரத்தின்போது, செல்லும் இடங்களில், ஸ்ரீரங்கநாச்சியாரை அங்கு வரவழைப்பதற்குக் காரணமாகி விடுகிறாள் (அங்கு லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகிறது). அனைத்து விருப்பங்களையும் அளிக்கவல்லவளாக உள்ளாள். இந்த உலகின் ரக்ஷணத்தின் பொருட்டு, ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள், இராமாயணம் முதலான காவியங்கள் தோன்றக் காரணமாக இருந்தாள்.