Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 922)
Paththati 30 - சித்ர பத்ததி
காரிகா ந ந யாத்ராயா யா கேயாஸ்யஸ்ய பாநுபா பாதபா ஹ ஹ ஸித்தாஸி யஜ்ஞாய மம ஸாஞ்ஜஸா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்திற்குக் காரணமாக நீ உள்ளாய்; புகழத்தக்கவளாக உள்ளாய்; சூரியன் போன்ற ப்ரகாசம் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக் காப்பாற்றும் பாதுகைகளாக உள்ளாய். இப்படிப்பட்ட நீ, நான் செய்யும் ஆராதனையை ஏற்பதற்காக, நீயாகவே என் இருப்பிடம் வந்துள்ளாயே! என்ன ஆச்சர்யம்!
இந்த ச்லோகத்தில் அவிசிஷ்ட ப்ரதிலோம பாடம் என்ற அமைப்பில் உள்ளது. இதன் கருத்து - இந்த ச்லோகத்தைத் திருப்பிப் படித்தாலும், இதே பொருளையே அளிக்கவல்லதாகும். இது கீழே உள்ளது: ஸாஞ்ஜஸா மம யஜ்ஞாய ஸித்தாஸி ஹ ஹ பாதபா பாநுபா கேயாஸ்யஸ்ய யா யாத்ராயா ந ந காரிகா