Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 921)

Paththati 30 - சித்ர பத்ததி

ஸா பூபா ராமபாரஸ்தா விபூபாஸ்தி ஸபாரதா தாரபா ஸக்ருபா துஷ்டி பூரபா ராமபாதுகா

இந்தப் பூமியைக் காத்தபடி உள்ளாள்; துக்கக்கடலின் கரையாக உள்ள இராமனிடம் உள்ளாள்; ஸ்ரீரங்கநாதனின் உபாஸனத்தின் எல்லையாக உள்ளாள்; ப்ரணவத்தில் பொருளான ஸ்ரீரங்கநாதனை ஸஞ்சார காலத்தில் காப்பாற்றும் தயை கொண்டவள் - இப்படிப்பட்ட இராமனின் பாதுகை நம்மை அனைத்துக் குற்றங்களில் இருந்தும் காப்பாற்றுகிறாள்.

இங்கு முரஜபந்தம் என்பது பயன்பத்தப்பட்டுள்ளது. முரஜம் என்றால் உடுக்கு முதலான வாத்யங்களைப் போன்றதாகும். அதனுடைய மூலைக்கு மூலை கட்டப்படும் கயிறுகள் போன்ற அமைப்பை இங்கு காணலாம்.