Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 920)
Paththati 30 - சித்ர பத்ததி
பாடாகாளீ ஜ்ஜாட துச்சே காதாபாநாய புல்லகே ஸமாதௌ சடஜித் சூடாம் வ்ருணோஷி ஹரி பாதுகே
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வலிமையான பாவங்களின் வரிசை என்னும் புதர்கள் அற்றதாகவும், மலர்ந்த மனதை உடையதான யோகப்யாஸத்தில் திருவாய்மொழி தோன்றும் பொருட்டு, நீ நம்மாழ்வரின் தலையைப் பற்றுகிறாய் போலும்.
இங்கு அபுநருக்தவ்யஞ்ஜனம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. வ்யஞ்ஜனம் என்றால் மெய் எழுத்துக்கள் ஆகும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மெய்எழுத்துக்கள் மீண்டும் பயன்படுத்தப்படவில்லை.