Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 919)
Paththati 30 - சித்ர பத்ததி
ராமபாத கதாபாஸா ஸா பாதா கத பாமரா காத் உபாநஞ்ச காஸஹ்யா ஹி ஆஸ காஞ்சந பாதுகா
இராமனின் திருவடிகளில் இருப்பவளும், தனது ஒளி மூலம் விளங்கி நிற்பவளும், சத்ருக்கள் ஒழியப்பெற்ற தேவர்களை உடையவளும் ஆகிய தங்கமயமான பாதுகை நான்முகனிடமிருந்து அயோத்திக்கு வந்தாள். சூரியனாலும் தாங்க இயலாத ஒளியுடன் கூடியதாக உள்ளாள்.
இங்கு ப்ரதிலோம யமகம் கையாளப்பட்டுள்ளது. அதாவது முதல் பாதத்தைத் திருப்பிப் படித்தால் இரண்டாம் பாதம் ஆகிறது. இது போன்றே இரண்டாம் பாதத்தைத் திருப்பினால் முதல் பாதம் ஆகிறது. உதாரணமாக, “ஸா பாதா கத பாமரா” என்பதைத் திருப்பிப் படித்தால், “ராமபாத கதாபாஸா” என்றாகும். இதுவே முதல் பாதமாக உள்ளதைக் காண்க.