Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 918)

Paththati 30 - சித்ர பத்ததி

சர்யா ந: சௌரிபாது த்வம் ப்ராயச்சித்தேஷு அநுத்தமா நிவேச்யஸே தத: ஸத்பி: ப்ராயச்சித்தேஷு அநுத்தமா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எங்களது பாவங்கள் தொலைவதற்காக நாங்கள் செய்யக்கூடிய பிராயச்சித்தங்களில் மிகவும் உயர்ந்த பிராயச்சித்த கர்மமாக நீயே உள்ளாய். இதனால்தான் அறிஞர்கள் உன்னைத் தங்கள் மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளும்படியாக நீ உள்ளாய்.