Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 917)

Paththati 30 - சித்ர பத்ததி

யாம: ச்ரயதி யாம் தத்தே யைந யாத்யாய யாச்ச யா யாஸ்ய மாநாய யை வாந்யா ஸாமாம் அவது பாதுகா

எவளை ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சார காலத்தில் அடைகிறானோ; எவள் ஸ்ரீரங்கநாதனைத் தாங்குகிறாளோ; எவள் ஸ்ரீரங்கநாதனால் ஸஞ்சாரம் செய்கிறாளோ; எதவள் ஸ்ரீரங்கநாதனுக்காகவே உள்ளாளோ; எவள் ஸ்ரீரங்கநாதனிடமிருந்து தோன்றியவளோ; எவள் ஸ்ரீரங்கநாதனுக்கு பூஜையின்போது ஸமர்ப்பிக்கப் படுகிறாளோ; எவள் ஸ்ரீரங்கநாதனிடத்தில் பெறத்தக்கவளோ – அந்தப் பாதுகை என்னைக் காக்க வேண்டும். விளக்கம் – “அ” என்னும் பதம் எம்பெருமானைக் கூறுவதாகும். இந்தப் பதத்தின் ஏழு வேற்றுமைகளையும் இந்த ச்லோகத்தின் காணலாம் (ஸ்ரீரங்கநாதனால், ஸ்ரீரங்கநாதனுக்காக, ஸ்ரீரங்கநாதனின் போன்ற ப்ரயோகங்கள்).