Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 916)
Paththati 30 - சித்ர பத்ததி
ப்ரதிபாயா: பரம் தத்வம் பிப்ரதீ பத்மலோசநம் பச்சிமாயாம் அவஸ்தாயாம் பாதுகே முஹ்யதோ மம
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்திற்கும் மேலான பொருளை, தாமரை போன்ற கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனை நீ எழுந்தருளப் பண்ணிக்கொண்டு, மரணகாலத்தில் மயக்கம் அடைகின்ற என் முன்பாக, ப்ரத்யக்ஷமாக நிறுத்த வேண்டும். புதிய விஷயங்களை உடனடியாக உணரும் புத்திகூர்மை என்பதாகும். இதுவே முதல் பதமாக உள்ளது. இதனைக் கண்டவுடன் இந்த ச்லோகத்தில் வினைச்சொல் இல்லையே என்ற வியப்பு தோன்றும். ஆனால் இதுவே வினைச்சொல்லாகவும் கையாளப்பட்டுள்ளது. இதற்கு “நேரடியாக வருவாய்” என்ற பொருள் உள்ளது.
இந்த ச்லோகத்தில் க்ரியாகுப்தம் என்ற சித்ர சப்தம் உள்ளது. இங்கு ப்ரதிபா என்ற முதல் பதம் காண்க. இது பெயர்ச்சொல் ஆகும்.