Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 915)

Paththati 30 - சித்ர பத்ததி

அநந்ய சரண: ஸீதந் அநந்த க்லேச ஸாகரே சரணம் சரண த்ராணம் ரங்கநாதஸ்ய ஸம்ச்ரயே

வேறு எந்தவிதமான கதியும் இல்லாமல் ஸம்ஸாரம் என்ற துன்பக் கடலில் மூழ்கியபடி உள்ள நான், ஸ்ரீரங்கநாதனின் பாதுகையைச் சரணம் என்று அடைகிறேன்.

இங்கு உள்ளது நிரோஷ்ட்யம் என்ற சப்தசித்ரமாகும். உ, ப, ம, ஒ போன்ற எழுத்துக்கள் உதடுகளால் உச்சரிக்கப்படவேண்டியவை. இவற்றுக்கு ஓஷ்ட்யம் என்று பெயர். இவை இல்லாமல் இந்த ச்லோகம் அமைந்துள்ளது.