Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 914)
Paththati 30 - சித்ர பத்ததி
பத்மேவ மங்கள ஸரித் பாரம் ஸம்ஸார ஸந்ததே: துரித க்ஷேபிகா பூயாத் பாதுகா ரங்க பூபதே:
சுபங்கள் என்பது ஆறு போன்று ஓடி வருவதாவும், ஸம்ஸாரத்தின் எல்லை போன்று உள்ளதாகவும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகை உள்ளாள். அவை ஸ்ரீரங்கநாச்சியார் போன்று நம்முடைய பாவங்களை நீக்கவேண்டும்.
இங்கு உள்ளது பூதசதுர்த்தம் என்னும் சித்ர சப்தம் ஆகும். ”பாதுகா ரங்க பூபதே:” என்பதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மற்ற பதங்களில் இருந்து அமைக்கப்பட்டவை ஆகும்