Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 913)

Paththati 30 - சித்ர பத்ததி

ஸுரா ஸுரா ஆர்சிதா தந்யா துங்கமங்கள பாலிகா சராசர அச்ரிதா மாந்யா ரங்க புங்கவ பாதுகா

தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்படுபவள்; அனைத்து ஸம்பத்துகளும் நிறைந்தவள்; மிகவும் சிறந்த சுபங்கள் அனைத்தையும் காப்பவள்; நடப்பன, நிற்பன என்ற பலவற்றாலும் அடையத்தக்கவள் - இப்படிப்பட்டவளான ஸ்ரீரங்கநாதனின் பாதுகை அனைவராலும் கொண்டாத்தக்கவள் ஆவாள்.