Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 912)
Paththati 30 - சித்ர பத்ததி
ச்ருணு தே பாதுகே சித்ரம் சித்ராபி: மணிபி: விபோ யுகக்ரம புவோ வர்ணாந் யுகபத் வஹஸே ஸ்வயம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை பற்றிய வியக்கவைக்கும் செய்தியைக் கேட்பாயாக! ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணம் எடுத்துக்கொள்ளும் ஸ்ரீரங்கநாதனின் நிறங்களை நீ பலவிதமான இரத்தினங்கள் மூலம், ஒரே யுகத்தில் வெளிப்ப்படுத்துகிறாய்.
எம்பெருமான் க்ருத யுகத்தில் வெண்மை, த்ரேதா யுகத்தில் சிகப்பு, துவாபர யுகத்தில் பொன்னிறம், கலியுகத்தில் கருப்பு என்று காணப்படுகிறான். பாதுகையில் உள்ள இரத்தினக்கற்களில் இந்த நிறங்களைக் காணலாம்.