Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 911)

Paththati 30 - சித்ர பத்ததி

ப்ரதிஷ்டாம் ஸர்வசித்ராணாம் ப்ரபத்யே மணிபாதுகாம் விசித்ர ஜகத் ஆதார: விஷ்ணுர் யத்ர ப்ரதிஷ்டித:

பலவிதமான வியக்கவைக்கும் விஷயங்கள் கொண்ட இரத்தினமயமான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் சரணம் அடைகிறேன். இந்தப் பாதுகையில் அல்லவோ பலவிதமான வியக்கவைக்கும் தன்மைகள் கொண்டவனும், உலகங்களுக்கு ஆதாரமாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதன் நிலையாக நிற்கிறான்?