Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 910)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

வஹதி க்ஷிதிவ்யவஹிதாம் ஸோபி த்வாம் கதிஷு பாதுகே ரங்கீ கமடபதி புஜகபரிப்ருட கரிவர குலசிகரி பூமிகா பேதை:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னால் தாங்கப்படுபவனாகவே இந்த உலகத்தினரால் ஸ்ரீரங்கநாதன் அறியப்படுகிறான். அப்படிப்பட்ட அவன் தனது ஸஞ்சார காலங்களில் ஆமை, திக்யானைகள், பர்வதங்கள் போன்ற பலவிதமான வடிவங்கள் கொண்டவனாய் உன்னைத் தாங்கி நிற்கிறான்.