Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 909)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
லக்ஷ்மீ நூபுர சிஞ்ஜிதேந குணிதம் நாதம் தவ ஆகர்ணயந் ஆஜிக்ரந் நிகமாந்த கந்த துளஸீ தாம உத்திதம் ஸௌரபம் காலே குத்ரசித் அகதம் கருணயா ஸார்த்தம் த்வயா சாக்ரத: பச்யேயம் மணிபாதுகே பரதரம் பத்மேக்ஷணம் தைவதம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! என்னுடைய அந்திம காலத்தில் - ஸ்ரீரங்கநாச்சியாரின் தண்டையின் ஓசையால் மேலும் அதிகரிக்கப்பட்ட உனது நாதம் கேட்க வேண்டும்; வேதவாஸனை வீசுகின்ற துளஸி மாலையை அதன் நறுமணத்துடன் முகரவேண்டும்; என் மீது மிகுந்த கருணையுடன், உன்னுடன் சேர்ந்தபடி அனைத்த்திற்கும் மேலானவனாகிய, தாமரை போன்ற கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதன் அங்கு வந்து நிற்க, அவனை நான் பார்க்கக் கடவேனாக.