Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 908)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
சந்த்ராபீட சிகண்ட சந்த்ர சிகர ச்யோத்த் ஸுதாநிர்ஜ்ஜர ஸ்தோக ஆச்லிஷ்ட ஸுரேந்த்ர சேகர ரஜ: ஸ்த்யாநாம் ஸ்தும: பாதுகாம் ப்ரஹ்மஸ்தம்ப விபக்த ஸீமவிவித க்ஷேத்ரஜ்ஞ ஸர்க்கஸ்திதி த்வம்ஸ அநுக்ரஹ நிக்ரஹ ப்ரணியிநீ யா ஸா க்ரியா ரங்கிண:
சிவனின் தலையில் ஆபரணம் போன்றுள்ள சந்த்ரனின் மேல் பாகத்தில் இருந்து பெருகும் அமிர்த அருவியின் துளிகளுடன், தேவர்களின் தலையில் உள்ள மலர்களின் துகள்களும் சேர்ந்து நிரம்பிய ஸ்ரீரங்கநதனின் பாதுகைகளை நாங்கள் வணங்குகிறோம். இந்த உலகில் நான்முகன் தொடங்கி, புல்பூண்டுவரை காணப்படும் பலவகையான ஏற்றத்தாழ்வுகள் கொண்ட உயிர்களின் ஸ்ருஷ்டி, இருப்பு (ஸ்திதி) மற்றும் ஸம்ஹாரம்; இவைகளுக்குக் கிட்டும் கடாக்ஷம் மற்றும் தண்டனைகள் ஆகியவற்றை ஸ்ரீரங்கநாதனின் லீலைகளாக மிகவும் பிரியத்துடன் பாதுகைகள் அல்லவோ செய்கிறாள்?