Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 907)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

காலே தல்பப புஜங்கமஸ்ய பஜத: காஷ்டாம் கதாம் சேஷதாம் மூர்த்திம் காமபி வேத்மி ரங்க ந்ருபதே: சித்ராம் பத த்ரத்வயீம் ஸேவா நம்ர ஸுராஸுரேந்த்ர மகுடீ சேஷாபடீ ஸங்கமே முக்தா சந்த்ரிகயேவ யா ப்ரதயதே நிர்மோகயோகம் புந:

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! வியப்பை அளிக்கவல்ல ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளான உங்களை அவனது ஸஞ்சார காலத்தில் அடிமைத்தனத்தின் எல்லைக்கே செல்வதால், அவனுடைய படுக்கையான ஆதிசேஷனின் உருவமே என்று எண்ணுகிறேன். ஸ்ரீரங்கநாதனை வணங்கி நிற்பவர்களான தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைகளில் உங்களை வைக்கும்போது உங்கள் முத்துக்களின் ஒளியானது பரிவட்டம் போன்று காணப்படுகிறது. மேலும் அவர்களின் தலையில் உள்ள பரிவட்ட வஸ்த்ரத்துடன் இந்த ஒளியும் இணையும்போது, உரித்த நாகத்தின் தோல் போன்று காணப்பட்டு, ஆதிசேஷனை நினைவுபடுத்துகிறது.