Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 906)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
கநகருசா ஜடாம் உரகமௌளி மணீந் மணிபி: த்ரிதிவ தரங்கிணீம் தரள மௌக்திக தீதிதிபி: குடிலதயா க்வசித் சசிகலாம் அதரீ குருஷே முரரிபு பாதுகே புரபித: சிரஸா வித்ருதா
முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவனின் தலையால் நீ ஏற்கப்பட்டபடி நிற்கிறாய். அந்த நேரத்தில் – உனது தங்கத்தின் ஒளி மூலம் அவனது சடையின் ஒளி, உனது இரத்தினக்கற்களின் ஒளி மூலம் அவன் தலையில் உள்ள நாகத்தின் தலைமணிகளின் ஒளி, நீரோட்டம் கொண்ட உனது முத்துக்களின் தன்மையால் கங்கையின் மேன்மை, உனது இடை வளைவு மூலம் அவனது தலையில் உள்ள சந்த்ரகலையின் அழகு ஆகியவற்றைத் தாழ்ந்து போகும்படிச் செய்கிறாய்.