Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 905)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
சதுர விஹாரிணீம் ருசிர பக்ஷருசிம் பவதீம் மநஸிஜ ஸாயகாஸந குணோசித மஞ்ஜுரவாம் அநுபதம் ஆத்ரியேமஹி மஹேந்த்ரசிலா மஹிதாம் ஹரி சரணாரவிந்த மகரந்த மது வ்ரதிகாம்
ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! மிகவும் நேர்த்தியான ஸஞ்சாரம் கொண்டவளாக உள்ளாய்; உனது அழகான பக்கங்கள், ஒளி வீசும் இறகுகள் போன்றே உள்ளன; மன்மத வில்லின் நாண் எப்படி ஒலிக்குமோ அது போன்று உனது நாதம் இனிமையாக உள்ளது; இந்த்ரநீலக்கற்கள் மூலம் மிகவும் பெருமை பெற்று, கறுத்தும் உள்ளாய். இப்படியாக ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளில் உள்ள மதுவை எப்போதும் பருகியபடி உள்ள பெண் வண்டு போன்ற உன்னை, நாங்கள் ஒவ்வொரு நொடியிலும் வணங்குவோம்.