Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 904)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஸ்ரீரங்க இந்தோ: சரணகமலம் தாத்ருசம் தாரயந்தீ காலே காலே ஸஹகமலயா க்லுப்த யாத்ரோத்ஸவஸ்ரீ: கத்வா கத்வா ஸ்வயம் அநுக்ருஹ த்வாரம் உந்நித்ர நாதா பௌராந் நித்யம் கிமபி குசலம் பாதுகே ப்ருச்சஸீவ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களும் சரணம் அடைவதற்கு ஏற்றதான ஸ்ரீரங்கநாதனின் தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தாங்கி நிற்கிறாய். அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதன் தனது பிராட்டியுடன் கூடியவனாக திருவரங்கத்தின் திருவீதிகளில் வலம் வருதல் என்ற சிறப்பை நீ உண்டாக்குகிறாய். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நீ உனது நாதங்களை எழுப்பியபடி உள்ளாய். இதனைக் காணும்போது, அன்றாடம் திருவரங்கத்து மக்களிடம் சென்று, அவர்கள் நலம் விசாரிப்பது போன்று தோன்றுகிறது.