Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 903)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

வஜ்ர உபேதாம் வலபிதுபல ச்யாமளாம் மஞ்ஜுகோஷாம் முக்தாஸாராம் மதுரசபலாம் வீக்ஷ்ய விஷ்ணோ: பதம் த்வாம் ஹர்ஷ உத்கர்ஷாத் உபரி சலயந் பாதுகே சந்த்ரகாந்தம் தத்தே நித்யம் த்ருத கநருசி: தாண்டவம் நீலகண்ட:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது வைரக்கற்கள் இடி போன்று உள்ளன; இந்த்ரநீலக்கற்கள் எங்கும் கறுத்து காணப்படுகின்றன; இனிமையான நாதம் என்பது மெல்லிய சப்தத்துடன் உள்ளது; முத்துக்களால் சிறப்புற்று உள்ளாய் (இந்த முத்துகள் மழைத்துளி போன்று உள்ளன); அழகான உனது அசைவுகள் மின்னல் போன்று காண்படுகின்றன. இப்படியாக நீ மழைக்காலம் போன்றே ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் காணப்படுகிறாய். இதனைக் கண்டு வணங்கும் சிவன் (மயில்), தனது பிறைச்சந்த்ரனை (தோகையை) எப்போதும் மெதுவாக ஆட்டியபடி, எப்போதும் ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார் (மயில் ஆடுகிறது). அதாவது, மழைமேகம் கண்ட மயில் ஆடுகிறது என்பதையும் ச்லேடையாகக் கூறுகிறார்.