Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 902)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ஸம்ஸாரத்வ ச்ரமப்ரிணதம் ஸம்ச்ரிதாநாம் ஜநாநாம் தாபம் ஸத்ய: சமயிதுமலம் சார்ங்கிண: பாதுகே த்வம் சந்த்ராபீடே ப்ரணமதி நவாம் சந்த்ரிகாம் ஆபிபத்பி: தாரா நிர்யத் ஸலில கணிகா சீகரைச் சந்த்ரகாந்தை:
சார்ங்கம் என்ற வில்லைக் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே! சந்த்ரனைத் தலையில் கொண்ட சிவன் உன்னை வணங்கும்போது, அந்த நிலவின் ஒளி ழுழுவதையும் உன்னில் பதிக்கப்பட்ட சந்த்ரகாந்தம் என்ற கற்கள் குடித்துவிடுகின்றன. (சந்த்ரகாந்தம் என்ற இரத்தினக்கற்கள் மீது நிலவின் ஒளிபட்டவுடன், அவற்றிடம் இருந்து நீர் வெளிப்படும் என்பர்). இதனால் அந்தக் கற்கள் தங்களிடம் இருந்து தாரைதாரையாக நீர்த்துளிகளைப் பெருக்கியபடி உள்ளன. இந்த நீரானது ஸம்ஸாரம் என்ற வழியில் உள்ள பாலைவனத்தில் ஏற்படும் சிரமம் நீங்கும்படியாக தாகத்தை (வேதனையை) அடக்கி விடுகிறது. இப்படியாகத் துன்பம் போக்குபவளாக உள்ளாய்.