Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 901)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
நித்யம் ரங்க க்ஷிதிபதி பதந்யாஸ தந்ய ஆத்மந: தே சிஞ்ஜாநாதம் ச்ரவண மதுரம் பாதுகே தீர்க்கயந்த: காலே தஸ்மிந் கரணவிகம க்லேசஜாதம் விஹந்யு: ஸந்தாபம் நஸ்தருண துளஸீகந்திநோ கந்தவாஹா:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இன்மையான நாதம் என்பது ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடிவைப்பிலும், மேலே ஓங்கிய சிறப்பை அடைகிறது. இந்த நாதத்தை வெகுதூரம்வரை கொண்டு செல்லும் காற்றானது, தன்னுடன் ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் உள்ள துளஸியின் நறுமணத்தையும் சேர்த்து கொண்டு செல்கிறது. இப்படிப்பட்ட காற்றானது மரணத்தின் பிடியில் நிற்பவர்களின், இந்த்ரிய அழிதலால் உண்டான வேதனைகளை மாற்றி, அவர்களின் துன்பங்களை நீக்க வேண்டும்.