Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 900)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

மாதர் மஞ்ஜுஸ்வந பரிணத ப்ரார்த்தநா வாக்ய பூர்வம் நிக்ஷிப்தாயாம் த்வயி சரணயோ: பாதுகே ரங்கபர்த்து: த்வயி ஆயாத்தம் கிமபி குசலம் ஜாநதீநாம் ப்ரஜாநாம் பர்யாப்தம் தத் ந கலு ந பவத்யாத்ம நிக்ஷேப க்ருத்யம்

இந்த உலகைக் காப்பாற்றும் தாய் போன்ற பாதுகையே! உன்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் ஸமர்ப்பிக்கின்றனர். அப்போது நீ, ”என்னை இனி நீ காக்க வேண்டும், வேறு கதி இல்லை”, என்று உனது இனிய நாதங்கள் மூலம் ஸ்ரீரங்கநாதனிடம் ப்ரபத்தியைச் செய்கிறாய். இந்தச் செயல் மூலம் தங்களது அனைத்து நன்மைகளும் இனி பாதுகை மூலவே கிட்டிவிடும் என்று அறிகின்ற மக்களுக்கு, நீ செய்த பரஸமர்ப்பணமே போதுமானதாக ஆகிறது (தனியாக நாம் அனுஷ்டிக்க வேண்டியதில்லை என்று எண்ணுகின்றனர். அதாவது, நமக்காக பாதுகையே ப்ரபத்தி செய்துவிடுகிறாள்).