Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 899)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ஸ்தித்வா பூர்வம் க்வசந பவதீ பத்ர பீடஸ்ய மத்யே ரத்ந உதஞ்சத் கிரண நிகரா ரங்கிண: பாதரக்ஷே வ்யாகீர்ணாநாம் ந்ருபதி விரஹாத் தேவி வர்ணாச்ரமாணாம் நூநம் ஸீமாவிபஜந ஸஹம் நிர்மமே ஸூத்ரபாதம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் சென்றபோது, அரசன் இல்லாத காரணத்தினால் அயோத்தியில் வர்ணங்களும், ஆச்ரமங்களும் (வர்ணம் = அந்தணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன்; ஆச்ரமம் = ப்ரஹ்மசர்யம், க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம், ஸந்யாஸம்) எந்தவிதமான பிரிவும் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று கலந்து நின்றன. அப்போது உனது இரத்தினக்கற்களின் மூலமாக எழுகின்ற ஒளியானது, நூல் போல் நின்று, அந்த வர்ணாச்ரமங்களைச் சரியான எல்லையுடன் பிரித்து வைத்தன. இதனை நீ செய்தாய் போலும்.