Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 898)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ரம்ய ஆலோகா லளித கமநா பத்மராக அதரோஷ்டீ மத்யே க்ஷாமா மணிவலயிநீ மௌக்திக வ்யக்தஹாஸா ச்யாமா நித்யம் ஹரிதமணிபி: சார்ங்கிண: பாதரக்ஷே மந்யே தாது: பவஸி மஹிளா நிர்மிதௌ மாத்ருகா த்வம்

சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் அழகிய தோற்றத்தைக் கொண்டவளாக, மெதுவான அழகிய நடையைக் கொண்டவளாக, பத்மராகக் கற்களின் சிவந்த தன்மையால் அழகான உதடுகள் கொண்டவளாக, நடுப்பாகத்தில் (இடை) சிறுத்தவளாக, இரத்தினக்கற்களின் கூட்டம் என்ற வளையல்கள் அணிந்தவளாக, முத்துக்கள் போன்ற அழகான சிரிப்பைக் கொண்டவளாக, பச்சைக்கல் மூலம் என்றும் யுவதியாகத் தோற்றம் அளிப்பவளாக நீ உள்ளாய். இப்படியாக நான்முகன் உத்தமப் பெண்களைப் படைக்க உதவுகின்ற மாதிரி உருவமாக (model) நீ உள்ளாய் என்று எண்ணுகிறேன்.