Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 897)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஆஸந்நாம் திவஸம் அபுந: நக்தம் ஆபாதயந்தீ ஸ்பீதா லோகா மணிபிரபித: ப்ராணிநாம் அஸ்ததோஷா ப்ரஹ்வை: ஜுஷ்டா விபுதநிவஹை: பாதுகே ரங்கபர்த்து: பாத அம்போஜே திசதி பவதீ பூர்வ ஸந்த்யேவ காந்திம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை நெருங்கி வந்தவர்களுக்கு மறுபடியும் அறியாமை என்னும் இரவு வராமல், பகலை உண்டாக்கியபடி உள்ளாய். உனது இரத்தினக்கற்களின் ஒளி மூலம் அனைத்து திசைகளிலும் ப்ரகாசம் ஏற்படுத்துபவளாக உள்ளாய். மக்களின் தோஷங்கள், பாவங்கள் என்னும் இரவை நீங்குபவளாக உள்ளாய். தேவர்களின் கூட்டத்தால் வணங்கப்பட்டவளாக உள்ளாய். இப்படியாக உதய கால வேளை போன்றுள்ள நீ, ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் தாமரை மலரின் மலர்த்தியை ஏற்படுத்துகிறாய்.