Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 896)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

அப்யஸ்யந்த்யோ: க்ரமம் அநுபமம் ரங்கபர்த்து: விஹாரேண ஸ்தாநே ஸ்தாநே ஸ்வர பரிணதிம் லம்பித: தத்ததர்ஹாம் பர்யாயேண ப்ரஹித பதயோ: பாதுகே ச்ருத்யுதார: சிஞ்ஜாநாத: ஸ்புரதி யுவயோ: ச்ருங்கலா பந்தரம்ய:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைளே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் ஒப்பில்லாத அடிவைப்பை மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள். ஒன்று மாற்றி ஒன்றாக, ஒருவர் மாற்றி ஒருவராக அவனது திருவடிகளைச் செலுத்தியபடி உள்ளீர்கள். ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த இடத்திற்கு ஏற்ப ஸ்வரத்தின் மாறுபாட்டை உங்கள் நாதங்களில் காண முடிகிறது. இப்படியாக செவிக்கினிய உங்கள் நாதம், சங்கிலிப் பிணைப்பு போன்று அழகாக உள்ளது.

இங்கு க்ரமபாடம் கூறப்படுகிறது. முதல் இரண்டு பதங்களையும் முதலில் படிக்கவேண்டும். அடுத்து இரண்டாவது, மூன்றாவது பதங்கள்; மூன்றாவது, நான்காவது பதங்கள் என்று படிப்பது க்ரமபாடம் ஆகும். அதாவது “அப்யஸ்ஸந்த்யோ: க்ரமம்”, “க்ரமம் அநுபமம்”, “அநுபமம் ரங்கபர்த்து:”, ”ரங்கபர்த்து: விஹாரே” என்று படிப்பதாகும். இத்தகைய சங்கிலி போன்ற பாராயணம் போன்று ஸ்ரீரங்கநாதனின் நடையழகு உள்ளது என்கிறார்.