Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 895)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஸ்வச்ச ஆகாராம் ச்ருதி ஸுரபிதாம் ஸ்வாதுபாவ பந்நாம் மார்க்கே மார்க்கே மஹிதவிபவாம் பாதுகே தீர்த்தபேதை: சீத ஸ்பர்சாம் ச்ரம விநயிநீம் காஹதே மந்தமந்தம் க்ரீடாலோல: கமலநிலயா தத்தஹஸ்தோ யுவா த்வாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் தெளிந்த ரூபம் கொண்டுள்ளாய். வேதங்கள் மூலம் வாஸனை அளிக்கப்படுகிறாய். சிறந்த சுவையுடன் உள்ளாய். நீ ஸஞ்சாரம் செல்கின்ற வழி எங்கும் பல ஆசார்யர்களால் கொண்டாடப்படுகிறாய். குளிர்ந்த தன்மையுடன் உள்ளாய். உன்னை அடைந்தவர்களின் துன்பங்களையும் களைப்பையும் நீக்குகிறாய். இப்படியாக காவேரி போன்று பல தன்மைகளில் ஒத்திருக்கும் உன்னுடன் விளையாடி மகிழ ஸ்ரீரங்கநாதன் ப்ரீதியுடன் உள்ளான். அவன் ஸ்ரீரங்கநாச்சியாரால் திருக்கரங்கள் மெதுவாகப் பிடித்து விடப்பட்டு, உன்மீது மெதுவாக இறங்குகிறான் (காவேரியில் ஜலக்ரீடை செய்ய இறங்குகிறான். காவேரி போன்றே தன்மைகள் கொண்ட பாதுகையையும் தரித்துக்கொள்கிறான்).